கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆதரவு

November 8, 2019 21 0 0

ஆதரவு தெரிவித்துள்ளார்… பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெறும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வசந்த சேனாநாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் போதும் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மஹிந்த தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் மாற்றம், ஆதரவு, கோட்டாபய, மஹிந்த Categories: sri lanka
share TWEET SHARE
Related Posts