மோகன்லால் உடற்பயிற்சி செய்யும் படம்… ரசிகர்கள் வியப்பு

March 25, 2019 227 0 0

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மோகன்லால். இந்த வயதிலும் இப்படி ஒரு உடற்கட்டா என்று ரசிர்கள் வியந்து போய் உள்ளனர்.

மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தமிழிலும் விஜய்யின் ஜில்லா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக லூஷிஃபர் படம் ரிலீஸாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இதுவரை மட்டும் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் மோகன்லால் தனது ஜிம் வொர்க் அவுட் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து, 58 வயதை கடந்த போதிலும் இப்படியொரு உடற்கட்டா என ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.

Tags: ஒர்க்அவுட், ஜிம், மோகன்லால், ரசிகர்கள் Categories: Tamil
share TWEET SHARE
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *