Web Advertisement Contact

பாகிஸ்தானில் 3 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

Updated in 2020-Sep-10 01:48 AM

3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு... பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்க உள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''புதிதாக 441 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,99,855-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,444 பேர் குணமடைந்ததால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,950-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 5,540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,365-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அதிக அளவாக சிந்து மாகாணத்தில் 1,31,115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 97,461 பேரும், கைபர்-பக்துன்க்வா பகுதியில் 36,755 பேரும், இஸ்லாமபாத்தில் 15,804 பேரும், பலூசிஸ்தானில் 13,227 பேரும், கில்கிட்-பால்டிஸ்தான் 3,137 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,356 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.