Web Advertisement Contact

மும்பையில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் இன்று முதல் தொடக்கம்

Updated in 2020-Sep-22 08:06 AM

இன்று முதல் தொடக்கம்... ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் இந்தியாவில் இன்று முதன்முறையாகத் தொடங்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அந்த மையம் திறக்கப்படுவதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தகுதியான எந்த ஸ்மார்ட்போனையும் கொடுத்து ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பரிமாறிக் கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.