Web Advertisement Contact

சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்த சுரேஷ்ரெய்னா

Updated in 2020-Sep-27 02:44 AM

தன் செயலால் ரசிகர்களை அதிர்வடைய செய்துள்ளார் கிரிக்கெட் வீர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை சுரேஷ் ரெய்னா அன் பாலோ செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் முதல் போட்டியில் மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியை கூட வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் இழந்த சென்னை அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிக மிக மோசமாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் இல்லாதது தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து ரெய்னாவிடமே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் முழுவதிலும் சுரேஷ் ரெய்னா மற்றும் சென்னை அணியின் தோல்வி குறித்தான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சுரேஷ் ரெய்னாவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை அன்பாலோ செய்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை அணியில் இனி எப்போதும் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்காது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக சுரேஷ் ரெய்னாவும் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன்பாலோ செய்துள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த செயல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.