Web Advertisement Contact

விக்னேஷ்சிவன் பிறந்தநாளுக்கு ரூ.25 லட்சம் செலவு செய்த நயன்தாரா

Updated in 2020-Sep-28 08:43 AM

நயன்தாரா தன் காதலன் விக்னேஷ்சிவனுக்காக கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் செலவு செய்து ஒரு பர்த்டே பார்ட்டி வைத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தான் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக தற்போது வலம் வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இன்னும் சில வருடங்கள் காதலை மட்டுமே தொடர உள்ளார்களாம். அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த பிறந்த நாள் செலவு மட்டும் மொத்தம் 25 லட்சமாம். நயன்தாரா தன் காதலனுக்காக கிட்டத்தட்ட 25 லட்சம் செலவு செய்து ஒரு பர்த்டே பார்ட்டி வைத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விக்னேஷ் சிவன் இதுவரை போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் என மொத்தம் மூன்று படங்களைத் தான் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களில் நானும் ரவுடிதான் படம் மட்டும் தான் வெற்றி பெற்றது.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய இயக்குனர் இல்லை என்றாலும் அவர் ஒரு பெரிய இயக்குனர் போன்ற தோற்றத்தை நயன்தாராவை காதலிப்பதால் ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, கிடைச்சா இப்படி ஒரு லவ்வர் கிடைக்கணும் என தமிழ் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு மாங்கு மாங்கு என செலவு செய்து வருகிறாராம்.