Web Advertisement Contact

கடந்த 24 மணிநேரத்தில் 18 மாநிலங்களில் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

Updated in 2020-Oct-14 07:33 AM

18 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு.... இந்தியாவின் 18 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 424 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் இந்தியாதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாம் நாடாக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்து வரும் வாரங்களில் அது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை கூட மிஞ்சி விடும் என்று அஞ்சப்படுகிறது.

மகாராஷ்ட்ரா ,கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. 5 மாநிலங்களில் உள்ள பாதிப்புகளே மொத்த பாதிப்பின் 60 சதவீதமாகும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.