Web Advertisement Contact

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2345 பேர் பாதிப்பு

Updated in 2020-Oct-16 11:56 AM

2345 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டதோடு, 35பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 732பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 699பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 20ஆயிரத்து 543பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 490பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 188பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.