இயற்கை பொருட்களை கொண்டு மணமகளுக்கான பேஸ்பேக் செய்முறை

Updated in 2020-Oct-18 08:16 AM

மணப்பெண்ணுக்கு மேக்கப் என்றால் பொதுவாக அழகு நிலையங்களுக்குதான் செல்வோம். பல ஆயிரம் இதற்கு செலவழிக்கும் நிலைதான். இந்த ஆயிரத்தை செலவு செய்யாமல் வீட்டிலேயே ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கேரட்-1
தேங்காய்ப் பால்- கால் கப்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: கேரட்டினை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இறுதியில் அவற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஃபேஸ்பேக் போல் செய்து கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும். எளிமையானது மட்டுமின்றி, இயற்கை பொருட்களால் செய்வதால் இன்னும் அழகு கூடும்.