இயற்கை பொருட்களை கொண்டு முக வசீகரத்தை அதிகரிக்கும் பேஸ்பேக்

Updated in 2020-Oct-21 03:40 AM

இயற்கை பொருட்களை கொண்டே முக வசீகரத்தை அதிகரிக்கலாம். அதற்கான டிப்ஸ் உங்களுக்காக.

சருமத்தை அழகு படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி அழகு படுத்த பயன்படும் பொருளில் மிகவும் சிறந்தது மஞ்சள். உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருவதில் சிறந்தது புதினா. இந்த மஞ்சளுடன் புதினா இலையை கலந்து பேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்கலாம்.

தேவையான பொருட்கள்
புதினா இலைகள் – 7
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை: முதலாவது புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் இந்த பேஸ்டுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

மஞ்சளைக் கொண்டு பேஸ் பேக் போட்டால் 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். ஏனென்றால், நாம் அப்படி செய்யும் போது அது சருமத்தில் மஞ்சள் நிற கறைகளை ஏற்படுத்தும்.