டெல்லி, மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா பாதிப்பு

Updated in 2020-Oct-21 11:49 AM

டெல்லி, மகாராஷ்டிராவில் முறையே 3686 பேர், 8142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,40,436-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6128-ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3,10,191-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 24,117- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.17 லட்சத்தை கடந்தது. இங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 8,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,17,658-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 42,633-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 14,15,679 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 1,58,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.