சுவையான ருசி மிகுந்த தேங்காய்ப்பால் பாயாசம் செய்முறை

Updated in 2020-Oct-21 06:32 AM

தேங்காய்ப் பால் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது, மேலும் இது உடல் எடையினை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதால் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இப்போது தேங்காய்பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

தேங்காய் - 1
பச்சரிசி - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
வெல்லம் – 1/4 கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்

செய்முறை:  வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காயில் தண்ணீர் சேர்த்து குறைந்தது 4 முறை பால் எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி அரிசியைப் போட்டு வேகவிடவும். அதனுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசியுடன் கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து இறக்கினால் தேங்காய்ப் பால் பாயாசம் ரெடி.