ஆரோக்கியம் நிறைந்த ராகியில் அல்வா செய்முறை

Updated in 2020-Oct-24 09:34 AM

அருமையான ருசியும் ஆரோக்கியமும் நிறைந்தது... அல்வா வகைகளில் கேரட், பீட்ரூட், பாசிப் பருப்பு என நாம் பல வகையான அல்வாக்களை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் ராகி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
பாதாம் - 6-7
பிஸ்தா - 6

செய்முறை: பாலை நன்கு காய்ச்சவும், அடுத்து வாணலியில் நெய் ஊற்றி ராகி மாவு சேர்த்து கிளறவும். அடுத்து அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து சுண்டக் கிளறவும்.

இதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்துக் கலந்தால் ராகி அல்வா ரெடி.