தலைமுடி அடர்த்தியை அதிகரிக்க செய்யும் பூண்டு ஹேர் ஆயில் தயாரிப்பு முறை

Updated in 2020-Oct-24 09:41 AM

பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி பேச ஆரம்பித்தால் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். அந்த அளவு பூண்டு அதிக அளவில் மருத்துவப் பயன்களைக் கொண்டதாக உள்ளது. இத்தகைய பூண்டில் தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர் ஆயில் செய்வது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

பூண்டு-2
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி
கறிவேப்பிலை- 2 கொத்து

செய்முறை: தேங்காய் எண்னெயினை ஒரு கரண்டி அளவில் ஊற்றி அதில் பூண்டு மற்றும் கறிவேப்பிலையினைப் போட்டு பச்சை வாசனை போகும் அளவு வதக்கவும்.

இந்தக் கலவையினை மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு 3 நாட்கள் வரை ஊறவிடவும். இதனை வடிகட்டியில் வடிகட்டிப் பயன்படுத்தவும். இதனை வாரத்தில் 3 முறை என்ற அளவில் பயன்படுத்தினால் முடியின் அடர்த்தியானது நிச்சயம் அதிகரிக்கும்.