சீனாவில் அறிமுகம் ஆனது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்

Updated in 2020-Oct-24 09:43 AM

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ஓஷன் வேவ், அம்பர் ரெட், அப்சிடியன் பிளாக் மற்றும் மூன்லைட் ஜேட் போன்ற நான்கு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் எச்டி பிளஸ் பின்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி70 ஆக்டா கோர் பிராசஸர் எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாகவும், இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் AI குவாட் கேமரா அமைப்பு 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 சிஎம் மேக்ரோ லென்ஸ் இரண்டு 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்கள் 8 மெகா பிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வைஃபை டூயல் 4 ஜி வோல்ட்-இ ஜி.பி.எஸ் புளூடூத் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 10W சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 5,200 mAh பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.