கொள்வனவு செய்ய அனுமதி எதிர்பார்ப்பதாக ராணுவ தளபதி தகவல்

Updated in 2020-Oct-25 02:00 AM

கொள்வனவு செய்ய அனுமதி?... ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள  கம்பஹா மாவட்டத்தில் நாளைய தினம், (திங்கட்கிழமை) பொருட்களைக் கொள்வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே சவேந்திர சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்கு எப்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என்பது குறித்த இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.