தமிழகத்தில் பாஜக சார்பில் விரைவில் வெற்றிவேல் யாத்திரை

Updated in 2020-Oct-25 10:11 AM

தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது என்றும் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மருத்துவ கலந்தாய்வில் 7.5% உள் இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வர சில நாட்கள் கால தாமதம் ஆகலாம் என்றும் திமுக போராட்டம் காரணமாக தான் இந்த சட்டம் வந்தது என சொல்வார்கள் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களை தெய்வமாக போற்றுவது நம் வழக்கம். ஆனால் பெண்களை கொச்சை படுத்தும் விதமாக பேசியவர்களுக்கு நமது பெண்கள் சரியான நேரத்தில் கவனிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணி போராட்டம் நடத்த உள்ளனர் என்று தெரிவித்தார்.