பாரம்பரிய முறைப்படி மிளகை பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்

Updated in 2020-Oct-26 02:26 AM

நமது பாரம்பரிய முறைப்படி மிளகை பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

10 மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. அதற்கேற்ப நமது பாரம்பரிய  சமையலில் காரத்திற்கு மிளகும், இஞ்சியுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. மேற்கத்திய நாடுகளைக் கண்டு நாமும் மிளகாயை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டோம்.

ஆனால் நமது பாரம்பரிய முறைப்படி மிளகை பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள். மிகக் குறிப்பாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்துடன் மஞ்சள் சேர்த்து மென்று சாப்பிட்டு வர புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளைப் பயன்படுத்த  பலவிதமான நன்மைகளை பெறலாம். அதன்படி
செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை தடுக்கிறது.

உடல் எடையைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. உடல் வியர்வையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சு மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
உணவின் மூலம் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்துகிறது:

மிளகை  பொடித்து தயிருடன் கலந்து அரை மணி ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலசி அடுத்தநாளில் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வாரநாட்களில் இருந்த மனச்சோர்வு மற்றும்  களைப்பை போக்கி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.