விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு கொரோனா குமார்

Updated in 2020-Oct-26 09:36 AM

கொரோனா குமார்...இதுதான் விஜய்சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில்.

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. முழு நீள நகைச்சுவைக் கதையை மையமாக கொண்ட இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நந்திதா, அஸ்வின், ஸ்வாதி, சூரி, ரோபோ சங்கர் என பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்ற வசனம் பலரையும் ஈர்த்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமாரு என்றக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே விஜய் சேதுபதி மற்றும் கோகுல் கூட்டணியில் இந்த கொரோனா ஊரடங்கின் போது அடுத்தப் பட அறிவிப்பு வெளியானது. கொரோனா குமாரு என்றப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சினிமா வாலா பிக்சர்ஸ் பதாகையின் கீழ் கே.சதீஷ் தயாரிக்கிறார். 

விஜய தசமி தினமான இன்று கொரோனா குமார் திரைப்படத்தின் பூஜை போடப்பட்டது. இதனை இயக்குநர் கோகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.