கொரோனா அதிகரிப்பை தடுக்க இத்தாலியில் கடும் கட்டுப்பாடுகள்

Updated in 2020-Oct-27 01:59 AM

இத்தாலியில் கடும் கட்டுப்பாடுகள்... கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கையாக இத்தாலியில் உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், சினிமாக்கள் மற்றும் திரையரங்குகள் என்பன மூடப்பட்டுள்ளன.

அத்தோடு இரவு 8 மணிக்குள் உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைகள் மற்றும் பெரும்பாலான வணி நிலையங்களை திறந்து வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார சேவைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலான முடக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரதமர் கியூசெப் கோன்டே கூறினார். கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஒன்றாகும், அந்தவகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 21,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.