ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை சேர்த்த ஏர்டெல்

Updated in 2020-Nov-12 02:54 AM

ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் சேர்த்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் பத்து லட்சம் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. இந்த தகவல் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்தது. வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 12.28 லட்சம் வாடிக்கையாளர்களை ஆகஸ்ட் மாதத்தில் சேர்த்து இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 35.08 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 28.12 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்த்தில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.18 கோடிகளாக இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 0.33 சதவீதம் அதிகம் ஆகும்.