ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் ப்ரோ மாடல் அறிமுகம்

Updated in 2020-Nov-12 10:22 AM

மேக்புக் ப்ரோ மாடல்... ஆப்பிள் நிறுவனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மேக்புக் ப்ரோ மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆப்பிள் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் ஆனது  13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் ஆப்பிள் எம்1 சிப், நியூரல் என்ஜின், ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த லேப்டாப் ஆனது ஸ்டூடியோ தர மைக்ரோபோன் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது பிக்சர் மற்றும் செக்யூர் என்கிளேவ் வசதி கொண்டதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது, தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6 போன்ற கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஆப்பிள் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 20 மணி நேர பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த மேக்புக் ப்ரோ மாடல் ஆனது மேஜிக் கீபோர்டு, டச் பார், வசதியினைக் கொண்டதாகவும் மேலும் இது மிகவும் அதிக அளவிலான மெஷின் லெர்னிங் வசதியினைக் கொண்டுள்ளது.