வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக உள்ளது ராயல் என்பீல்டு புதிய மாடல்

Updated in 2020-Nov-15 09:01 AM

ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது ராயல் என்பீல்டு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் புதிய Meteor 350 மாடல் இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 349சிசி சிங்கிள் சிலிண்டர், யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் - பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு Meteor 350 மாடல் விலை ரூ. 1.76 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.