விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது க்ரூ டிராகன் விண்கலம்

Updated in 2020-Nov-15 08:49 AM

க்ரூ டிராகன் விண்கலம் விண்ணில் பாய்ந்தது... ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் 4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

27 மணி நேரத்தில் டிராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள்