காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றம்

Updated in 2020-Nov-15 08:52 AM

உடல்நிலை மோசமானது... கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். பேதம் பார்க்காமல் பாதிப்பு ஏற்படுத்தி வரும் வைரஸின் வீரியம் சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அகமது படேல் தற்போது கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு ஏற்பட்டவுடன் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அகமது படேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . உடல்நிலை நன்றாக இருந்த நிலையில் திடீரென மோசமடைந்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளது .

தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.