உலக அளவில் கொரோனாவிலிருந்து 3.8 கோடி பேர் குணமடைந்தனர்

Updated in 2020-Nov-16 02:11 AM

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 299 பேர் மீண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி உலகில் கொரோனாவால் 5 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்து 24 ஆயிரத்து 025 பேர் பலியாகி உள்ளனர். 3 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 299 பேர் மீண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் சென்னையில் மேலும் 680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 680 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.99 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 502 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் இதுவரை 2,08,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, கோவையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 123 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும், சேலத்தில் 87 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 82 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும், ஈரோடில் 59 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 680 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,99,805 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 253 பேரும், திருப்பூரில் 181 பேரும், திருவள்ளூரில் 169 பேரும், சேலத்தில் 127 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும், ஈரோடில் 112 பேரும், காஞ்சிபுரத்தில் 106 பேரும், திருவண்ணாமலையில் 79 பேரும், வேலுாரில் 57 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.