பாதுகாப்பு சுகாதாரத்தில் சிறப்பாக உள்ள மெட்ரோ; ஆர்யா தகவல்

Updated in 2020-Nov-17 06:33 AM

கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு முதல் முறையாக பயணிக்கிறேன். சென்னை மெட்ரோ பாதுகாப்பு சுகாதாரத்தில் சிறப்பாக இருக்கிறது என்று மெட்ரோ ரயிலில் செய்த பயணம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

கொரோனா லாக்டெளன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாத இறுதியிலிருந்து திரைப்பட வேலைகள் நிறுத்தப்பட்டன. சில தளர்வுகள் அறிவித்தாலும், படப்பிடிப்புக்கு அனுமதிக்க வில்லை. பலரின் வேண்டுகோளை ஏற்று குறிப்பிட்ட அளவிலான நபர்களை மட்டும் வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆயினும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

தமிழக அரசின் இந்தத் தளர்வால், பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. அரண்மனை 3 படத்திற்கான படப்பிடிப்பு விமானநிலையம் செல்ல வேண்டியிருந்த ஆர்யா, சென்னை மெட்ரோ ரயில் வழியாகச் சென்றடைந்திருக்கிறார். அந்தப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஆர்யா.

கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு முதல் முறையாக பயணிக்கிறேன். சென்னை மெட்ரோ பாதுகாப்பு சுகாதாரத்தில் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால் இந்தப் படம் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.