மீண்டும் களத்திற்கு வந்தார் விரிதிமான் சாஹா; பயிற்சியை தொடங்கினார்

Updated in 2020-Nov-20 10:51 AM

விரிதிமான் சாஹா களம் திரும்பினார்... ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க உள்ள முக்கிய மூன்று வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் விரிதிமான் சாஹா களத்துக்கு திரும்பி உள்ளார்.

அவரால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் களத்துக்கு திரும்பி உள்ளார்.

இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலானது. கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்ப உள்ளார். அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், ஜனவரி மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.

மறுபுறம் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, விரிதிமான் சாஹா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். ரோஹித் சர்மா 70 சதவீத உடற்தகுதியுடன் இருந்ததால் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்ற நிலை உள்ளது.

ஆனால், விரிதிமான் சாஹாவுக்கு இரண்டு தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அவரால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விக்கு கங்குலி உறுதி கூறி இருந்தார். விரிதிமான் சாஹா தற்போது பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். சாஹா எந்த சிரமமும் இன்றி பேட்டிங் செய்கிறார். அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவே தெரிகிறது.

விரிதிமான் சாஹா ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டம் ஆடினார். நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில், இந்திய அணிக்கு கை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.