தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சியை தொடங்கிய ரோகித் சர்மா

Updated in 2020-Nov-20 08:39 AM

உடற் தகுதி பயிற்சியை தொடங்கிய ரோகித்... பெங்களூரு நகரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சியை ரோகித் சர்மா தொடங்கி உள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மாவுக்குப் போட்டியின் போது காலில் அடிபட்டு தசைப் பிடிப்பு உண்டானது. இதையொட்டி அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணில் சேர்க்கவில்லை. ஆயினும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காகக் கடைசி இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா விளையாடினார்.

பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி அவர் 70% உடல் தகுதியுடன் மட்டுமே இருப்பதாகக் கூறியதால் அவரது உடல் தகுதி சர்ச்சைக்கு உள்ளானது.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். ஆகவே தனது உடல் தகுதியை நிரூபிக்கும் பயிற்சியை அவர் நேற்று பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கி உள்ளார்.

அவருக்கு முழு உடல் தகுதியை எட்டியதும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார். அவர் அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியதால் வெகு விரைவில் கிளம்புவார் என எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித் சர்மாவைப் போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் இதே அகாடமியில் பயிற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்