வாக்காளர் அடையாள அட்டை குறித்து மக்கள் நீதி மய்யம் விழிப்புணர்வு

Updated in 2020-Nov-20 08:49 AM

வாக்காளர் அடையாள அட்டை விழிப்புணர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

"வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும், அடையாள அட்டையில் இருக்கும் பிழைகளைச் சரி செய்துகொள்ளவும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அடையாள அட்டையை மாற்றிக்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் வரும் நவம்பர் 21&22 மற்றும் டிசம்பர் 12&13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

வாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்தும், இந்த முகாம் குறித்தும் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் உயரிய நோக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகச் சிறப்பான காணொளி வெளியிட்டிருக்கிறார் " என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ காட்சியில் நடிகர் கமல் ஹாசன், " வாக்களிப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். மேலும், தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களே இல்லை எனும் நிலையை உருவாக்குவோம் " என்றும் தெரிவித்துள்ளார்.