விஜய் சேதுபதியால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ருதிஹாசன்

Updated in 2020-Nov-21 10:55 AM

படப்பிடிப்பில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறுவதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லாபம் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து தனது வழக்கமான பாணியில் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த தகவலை அறிந்த ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியின் இந்த செயலால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் எப்போது ஷீட்டிங் தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.