சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Updated in 2020-Nov-21 10:56 AM

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு... சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது புதுச்சேரியில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இன்று (நவம்பர் 21) காலை 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமானார்கள். அதன்படி சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

முழுக்க அரசியலைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.