கனடா- அமெரிக்கா இடையிலான பயணக் கட்டுப்பாடு 8வது முறையாக நீட்டிப்பு

Updated in 2020-Nov-21 11:00 AM

பயணக்கட்டுப்பாடு நீட்டிப்பு... கனடா- அமெரிக்காவுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எட்டாவது முறையாக நீடிக்கப்படவுள்ளது.

இதன்படி கிறிஸ்மஸ்க்கு சில நாட்களுக்கு முன்பு குறைந்தது டிசம்பர் 21ஆம் திகதி வரை எல்லை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமையன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கொவிட்-19 தொற்றுக்கள் இன்னும் நிலையானதாக இருக்கும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை மறுதொடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க மாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்பு தெளிவுபடுத்தினார்.

இந்த மாதத்தில் தொற்று எண்ணிக்கையில் சாதனை படைத்த புள்ளிவிபரங்களைக் கனடா தெரிவிக்கையில், பயண நிலைமை மாறாமல் இருக்கும் என்பது ஆச்சரியமல்ல.

கட்டுப்பாடுகள் என்பது இரு நாடுகளுக்கிடையில், சில விதிவிலக்குகளுடன், கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. முறையான அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.