சுவை, ஆரோக்கியம் நிறைந்த பனீர் ஸ்டப்டு இட்லி செய்முறை

Updated in 2020-Nov-21 11:09 AM

எத்தனை நாட்கள்தான் இட்லி, தோசை என்று செய்த டிபனையே செய்வது என்று அலுத்து கொள்கிறீர்களா. இதோ உங்களுக்காக எளிதாக செய்யக்கூடிய பனீர் ஸ்டப்டு இட்லி செய்முறை. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - தேவையான அளவு
அரைத்த பனீர்- 50 கிராம்
குடை மிளகாய் - பாதி
வெங்காயம் - 1
மிளகாய் பொடி - தேவையான அளவு
கரம் மசாலா - ¼ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். கடாயில், எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின், அரைத்த பனீர், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இட்லி தட்டில், சிறிது எண்ணெய் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும். இட்லி மாவு சிறிதளவு, பன்னீர் கலவை சிறிதளவு சேர்த்து வேக வைக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். சட்னி அல்லது சாம்பார் சேர்த்து இந்த சுவையான, வித்தியாசமான இட்லியை சாப்பிடலாம்.