முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

Updated in 2020-Nov-27 07:33 AM

முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களி முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. டி காக் 30 ரன்களும், டூபிளசிஸ் 58 ரன்களும், வான் டர் டுசன் 37 ரன்னும், கிளாசன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் மலன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து வெளியேறினர்.

இயான் மார்கன் 12 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 86 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.