சீனாவில் ரெட்மி நோட் ப்ரோ 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Updated in 2020-Nov-27 07:35 AM

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம், இந்த ரெட்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டு உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டதாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4820 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.