ஸ்காட்லாந்தில் கிறிஸ்துமஸ் வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

Updated in 2020-Nov-28 10:21 AM

கடுமையான கட்டுப்பாடுகள்... கிறிஸ்துமஸ் வரை பப்கள், உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இன்னும் இறுதி செய்யப்படாத புதிய கட்டுப்பாடுகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் அவை ஆல்கஹால் பரிமாற முடியாத அமைப்பின் அடிப்படையில் இருக்கலாம்.

சினிமா, bowling alleys மற்றும் உட்புற பொழுதுபோக்கு இடங்களும் பண்டிகை இடைவேளைக்கு முன்பு மூடப்பட வேண்டும். இவை மூடப்படுவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ் வரையில் தொற்று வீதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடவடிக்கை தேவை என்று மார்க் டிரேக்ஃபோர்ட் கூறினார்.

ஆனால் வேல்ஷ் கன்சர்வேடிவ்கள் எந்தவொரு புதிய கட்டுப்பாடுகளும் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு உண்மையான அடியாக’ இருக்கும் என்று கூறியது.