அப்பாவின் படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ஐஸ்வர்யா ராய்

Updated in 2020-Nov-29 02:40 AM

தன் அப்பாவின் படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். அதன்பின்னர் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களுக்கு ஆராத்யா என்ற குழந்தை இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யாராய் உள்பட அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பொதுவாக தனது கணவர் மற்றும் மகள் புகைப்படத்தை மட்டுமே அவ்வப்போது பதிவு செய்து வரும் ஐஸ்வர்யா ராய் திடீரென தனது தந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார் உலக அழகி ஐஸ்வர்யாராயின் தகப்பனார் இவர்தானா நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்