ஒன்ராறியோவில் மேலும் 1800க்கும் அதிகமானோருக்கு கொரோனா பதிவு

Updated in 2020-Nov-29 07:14 AM

இரண்டாம் நாளாக அதிக கொரோனா பதிவு... ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் பதிவாகியுள்ள நிலையில் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஒன்ராறியோவில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேலும் 29 இறப்புகள் பதிவான நிலையில் ஒன்ராறியோவில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 3,624 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 95 ஆயிரத்து 876 பேர் மீண்டுள்ளனர், 1,510 நோயாளிகள் நேற்று குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.