இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

Updated in 2020-Nov-29 07:18 AM

தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா... இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், 77 பந்துகளில், 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகினர்.

மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் 69 பந்துகளில், 60 ரன்கள் எடுத்து, முகமது சமி பந்துவீச்சில், விராட்கோலி இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி, 64 பந்துகளில், 104 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார்.

14 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்த ஸ்டீவ் ஸ்மித், ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில், மோகமத் சமீர்-டம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். லபுஸ்சேன் 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 63 ரன்கள் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு, 389 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கி, அதிரடியான தொடக்கத்தைத் கொடுத்தனர். ஆனால் இந்திய அணி 58 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, அகர்வால் 28 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. 36 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் ஆட்டமிழந்தார். கோலியுடன் துணை கேப்டன் கேஎல் ராகுல் இணைந்து அதிரடியாக ஆட தொடங்கினர் ஆட்டம் சூடு பிடித்தது. அரைசதம் கடந்த விராட் கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த போது, ஹென்ரிகஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ராகுல் அரைசதம் கடந்து 76 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெற்றிக்கு 30 பந்துகளில் 87 ரன்கள் தேவை என்ற நிலை உருவாக்கியது. ரவீந்திர ஜடேஜா சிக்ஸர்களும், பவுண்டரியும் அடித்து விளையாடி 11 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாண்டியா 31 பந்துகளில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியை தழுவியது. 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெட்ரா ஆஸ்திரேலிய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.