தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை

Updated in 2020-Nov-29 07:44 AM

நெய் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. தினசரி உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.

மதிய உணவில் சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சில நேரங்களில் நெய்யைத் தவிர்க்கவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உப்பு சேர்க்காத உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. ஆறிய உணவிலும் நெய்யை சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகளை தூண்டிவிடும்.

ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். பாசிப்பருப்புடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் சேர உதவி செய்யும்.

இது தவிர அசைவ உணவுகளான பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்றவைகளில் நெய் சேர்த்து சாப்பிடக் கூடாது.

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடல் நலத்தை மேம்படச் செய்யும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வைத் திறனை மேம்படுத்துவதிலும் நெய்யின் பங்கு அதிகம்.