சம்யுக்தாவிற்கு இன்று குறும்படம் காத்திருக்கிறது! சிக்குவாரா?

Updated in 2020-Nov-29 07:45 AM

குறும்படம் போடப்பட்டு சிக்குவார் போல் உள்ளது சம்யுக்தா என்று தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆரி-பாலா மோதல், ஆரி - சம்யுக்தா மோதல் என எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சிலர் மட்டுமே வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வார நாமினேஷனுக்கு ஆரி, பாலா, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் நிஷா ஆகியோர் நாமினேஷ் செய்யப்பட்டுள்ளனர்.

அனிதாவும் நாமினேஷ் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ஒரு சலுகையால் அவர் தனக்கு பதில் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.
இந்நிலையில், இந்த வாரம் சம்யுக்தா நாமினேட் செய்யப்பட உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கால் சென்டர் டாஸ்கில் சனம் ஷெட்டியின் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் மழுப்பியதால் அவருக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே சனம் ஷெட்டி கொடுத்தார்.

மேலும், அனிதா மற்றும் ஆரியுடன் அவர் போடும் சண்டைகள், பார்வையாளர்களிடையே அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு ஆதரவாக யாரும் வாக்களிக்கவில்லை. எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆரியை வளர்ப்பு சரியில்லை என பலமுறை அவர் கூறியிருந்தார். ஆரி தன் தாய் பற்றி தவறாக பேசியதால் அப்படி பேசினேன் என சப்பை கட்டு கட்டினார். ஆனால், அப்படி தான் சொல்லவே இல்லை என ஆரி கூறியிருந்தார். இந்த கேள்வியை அவரிடம் எழுப்பியுள்ள கமல்ஹாசன், சம்யுக்தாவை கையும் களவுமாக பிடிக்க குறும்படத்தை போட்டுக் காட்டும் புரமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இன்று சிறப்பான சம்பவம் இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.