இன்றைய ராசிப்பலன் - 30.11.2020

Updated in 2020-Nov-29 09:02 AM

30-11-2020, கார்த்திகை 15 , திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.59 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

-நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம்.

-நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நேத்திரம் - 2.

ஜீவன் - 1.

இராகு காலம்- காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 - 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

 

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். தொழிலில் கடனை சமாளிக்க கடன் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் கிட்டும்.உற்றார் உறவினர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் தொல்லை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும். குடும்பத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய கூட்டாளி இணைவார்கள். தொழிலில் இருந்த மறைமுகப் பிரச்சனைகள் தீரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சல் உண்டாகும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு ஆதரவை அளிக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து வெற்றி காண்பீர்கள்.உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை அளிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உண்டாகும். வராத பழைய கடன் வசூலாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் எதிர்பாராத செலவு இருக்கும். குழந்தைகள் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவி அடைய காலதாமதம் ஆகும். கடன் தொல்லை தீரும்.உத்தியோகத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக இருந்து லாபத்தை அடைய வாய்ப்பு அதிகரிக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் ஆகும்.உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் இருக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரியங்களில் பிரச்சனை விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் வெளிவட்டாரத் தொடர்பு இருக்கும். சேமிப்புகள் உயரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். வீட்டில் ஒற்றுமை கூடும். பெண்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.தொழில் முயற்சிகளை எடுத்த பலன் அனைத்தும் வெற்றியை அளிக்கும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை மந்தமாகத்தான் இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருக்கும். விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமை உடனிருப்பவர்கள் பகிர்ந்து செய்வார்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சிறு சிறு கருத்து வேறுபாடு இருக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். வியாபார ரீதியில் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். சிங்கத்தை செலவிட்டால் வீண் பிரச்சனை நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும் அதுவே நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராக இருக்கும். உத்தியோகத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். அனுகூல பலன் கிட்டும்.