இன்றைய ராசிப்பலன் - 02.12.2020

Updated in 2020-Dec-01 08:20 AM

02-12-2020, கார்த்திகை 17, புதன்கிழமை, துதியை திதி மாலை 06.22 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.37 வரை பின்பு திருவாதிரை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் - 2.

ஜீவன் - 1.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 - 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சியை உண்டாகும். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனை உத்தியோகத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் வேலைப்பளு நீங்கும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் கூடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்குநீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையிட்டால் அந்த காரியம் தடைபட்டு போகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க தாமதம் உண்டாகும்.உத்யோகத்தில் மேலதிகாரிகள் இடம் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் தீரும். வீட்டில் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு திறமைகள் வெளிப்படும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியில் வழக்குகள் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கு. சேமிப்பு பணம் உயரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் உண்டாகும். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் இருக்கும். உத்யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உத்யோகத்தில் லாபம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக அமையும். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் இருக்கும். குழந்தைகள் வழியில் நல்ல செய்தி கள் இருக்கும்.உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். சேமிப்புகள் உயரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும்.தொழிலில் உடனிருப்பவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.வீட்டில் புத்திர வழியில் சுப செய்திகள் வீட்டுக்கு வந்து சேரும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக அமையும். வீட்டின் தேவையில்லாத டென்ஷன் இருக்கும்.விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு வார்த்தைகள் புது தெம்பை ஊட்டும். கடன் தொல்லை தீரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதமும் இருக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் இருக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும்.வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிக கவனம் வேண்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோக ரீதியில் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை தரும்.ஆடம்பரப் பொருட்களை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். போட்டி பொறாமைகள் நீங்கும்.சுபகாரிய முயற்சிகள் நல்ல பலனை அளிக்கும்.

மகரம்

உங்கள் இராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.உற்றார் உறவினர்களுடன் இருந்த மாற்றுக்கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சி அனைத்தும் பெரியவர்களின் ஆதரவை கொடுக்கும். அனுகூலப் பலனை தரும். சுப காரியங்களும் கை கூடி வரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பாராத வீண் பிரச்சனை வரும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் செலவு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் சிறு மாறுதல்கள் செய்தால் நல்ல பலன் உண்டாகும். தெய்வதரிசனம் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். நண்பர்களின் ஆதரவும் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற உடனிருப்பவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க சிறிது நாள் ஆகும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.