புற்றுநோயால் இறந்த வாலிபரின் விந்தணு மூலம் பிறந்த இரட்டை குழந்தைகள்

Updated in 2020-Dec-05 07:27 AM

புற்றுநோயால் இறந்த வாலிபரின் சேகரிக்கப்பட்ட விந்தணு மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் பிரதேஷ்  (27). இவரது தாய் ராஜஸ்ரீ (48). இவர் தனியார் பள்ளியின் ஆசிரியராக உள்ளார்.
பிரதேஷ் முதுகலை வரை பயின்று கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பதற்கு முன்னதாக அவர்களது விந்தணுக்களை மருத்துவமனையிலேயே சேகரித்துக் கொள்வார்கள்.

அதற்கு காரணம் புற்று நோய்க்காக அளிக்கப்படும் கதிர் வீச்சு சிகிச்சைகள் விந்தணுக்களை சேதப்படுத்துவதோடு, கால வரையின்றி வலுவிழக்க செய்துவிடும். அதன்படி பிரதேஷின் விந்தணுவும் அங்குள்ள மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிகிச்சை பலனின்றி பிரதேஷ் உயிரிழந்தார்.

மகனின் பிரிவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ராஜஸ்ரீ. அப்போது தான் மகனின் விந்தணு ஜெர்மனியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அதன்பிறகு அதனை புனே கொண்டுவர ஏற்பாடு செய்தார். அங்கு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அதன் பிறகு ஐவிஎஃப் நடைமுறையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. மகனின் விந்தணு மூலம் ராஜஸ்ரீ பாட்டியாகிவிட்டார்.

அதில் ஆண் குழந்தைக்கு மகனின் பெயரான பிரதேஷ் என்றும் பெண் குழந்தைக்கு ப்ரீஷா என்றும் பெயர் சூட்டியுள்ளார் ராஜஸ்ரீ