முக்கியத்துவம் கொடுத்தால் நடிப்பேன்; நிபந்தனை போட்ட நடிகை

Updated in 2020-Dec-11 12:59 PM

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் சமர்த்தான நடிகை தமிழில் பெரிய நம்பர் நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆனார்.  

இதில் இயக்குனரின் காதலியும் நடிக்கிறார். இரு கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு என்று இயக்குனர் சொன்னதால் சமர்த்தான நடிகை சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாதை அறிந்து கொண்ட சமர்த்தான நடிகை படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறாராம். 

இதனால் ஜெர்க் ஆன இயக்குனர் தன் காதலி நடிகையை தூது விட நான் நடிக்க வேண்டுமென்றால், தனக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளை வைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருக்கிறாராம் சமர்த்தான நடிகை. என்ன செய்வது தனது காதலி நடிகைக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைக்க முடியாதே என்பதால் வேறு நாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம் காதலர் இயக்குனர்.