ரசிகர்கள், நெட்டிசன்கள் எவ்வளவு கலாய்த்தாலும் பொருட்படுத்தாத நடிகை

Updated in 2020-Dec-20 03:02 AM

தமிழகத்தில் நடந்த முக்கியமான போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவ அந்த பெண் பெரிய முதலாளி வீட்டு சீசனில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் வீட்டிற்குள் சென்ற இவரது உண்மையான முகம் அங்கு வெளிப்பட்டது.  அங்கு இவர் செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை அளவுக்கு அதிகமாக சம்பாதித்து விட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் அதற்கு மோசமான கலாப்பு கொடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இருந்தாலும் எத்தனை கழுவி ஊற்றினாலும் அதை துடைத்து போட்டு விட்டு, சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த நடிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளாராம்.