போஸ்டரில் எனது பெயரும் வரணும்; நச்சரிக்கும் தேசிய விருது வென்ற இயக்குனர்

Updated in 2021-Jan-04 10:17 AM

என் பெயரையும் போஸ்டரில் போடுங்க... முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துள்ள தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், போஸ்டரில் தன் பெயரையும் போட சொல்லி படக்குழுவை தொந்தரவு செய்து வருகிறாராம்.

தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானக் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.

அதனால் படத்தின் டைட்டில் கார்ட் மற்றும் போஸ்டர்களில் ஹீரோவின் பெயரை போடுவது போல தனது பெயரையும் போட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாராம். அவரின் இந்த செயலால் படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிக்கிறார்களாம்.