பள்ளிப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாரானது நெற்கதிர்கள்

Updated in 2021-Jan-05 07:58 AM

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்... பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர், தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.

மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், நெல் சாகுபடி செய்வதற்கு, கடந்த ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மோளகவுண்டம்பாளையம், சமயசங்கிலி, களியனூர், எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், தெற்குபாளையம் மற்றும் பல பகுதிகளில், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

வாய்க்காலில் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வருவதாலும், மழை பெய்து வருவதாலும், நல்ல வளர்ச்சி பெற்று நெல் பசுமையாக காணப்பட்டது. தற்போது பசுமை நிறம் மாறி வருவதால், அறுவடைக்கு தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில், அறுவடை பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.