இன்றைய ராசிப்பலன் - 09.01.2021

Updated in 2021-Jan-08 07:48 AM

09-01-2021, மார்கழி 25, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

விசாகம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அனுஷம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் - 1.

ஜீவன் - 1/2.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் - காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

மேஷம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லதைக் கொடுக்கும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் வேண்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். தொழிலில் அதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். முன்னேற்ற நிலையிருக்கும் உத்தியோகத்தில். தொழிலில் பணி சுமை நீங்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத செலவுகள் இருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் இருக்கும். வியாபார ரீதியாக பயணத்தால் அலைச்சல் உண்டாகும்.நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று கடன்கள் நீங்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக அமையும். கொடுத்த கடன்கள் பெறுவதில் இழுபறி நிலை இருக்கும்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். மனைவி மூலமாக நல்லது நடக்க வாய்ப்பு இருக்கும்.உத்தியோகத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் நல்ல ஒற்றுமை உண்டாகும். வீட்டில் பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். உறவினர் வழியில் அனுகூலம் இருக்கும். சுபகாரியங்களில் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு காலையில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பரப் பொருட்களில் வாங்கி குவிப்பீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் சுறுசுறுப்பில்லாமல் செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவு இருக்கும்.உத்யோகத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பாராத உயர்வு உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் செய்யக்கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழிலில் வேலைப்பளு நீங்கும்.ஆன்மீகம் மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். வீட்டில் ஒற்றுமை இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறு இருக்கும். வீட்டில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். உத்யோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கூடும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.